ராமநாதபுரம் அரண்மனையில் 75வது சுதந்திர தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் திரு. குமரன் சேதுபதி தலைமை தாங்க இந்திய சீனப் போரின் போது பாரத தேசத்தை காப்பதற்கு தன்னுயிர் இழந்த பழனி என்ற ராணுவ வீரரின் மனைவி திருமதி.வானதிதேவி அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார். மேலும் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக தலைவர் திரு.ஆ.ஆடலரசன் சிறப்புரையாற்றினார்.