மறைந்த மதுரை ஆதீனத்திற்கு வி.ஹெச்.பி. சார்பில் இரங்கல்

0
290

292 ஆவது மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்(77) அவர்கள் கடந்த 13.08.2021 அன்று மறைந்ததை அடுத்து 16.08.2021 திங்கட்கிழமை விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

16.08.2021 காலை 10 மணி அளவில் விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரதிய இணை பொதுச் செயலாளர் ஸ்ரீ. ஸ்தாணுமாலயன் ஜி
293 வது ஆதீனமாக பொறுப்பேற்றுள்ள ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்களிடம் இரங்கல் தெரிவித்தார்.

உடன் தென் தமிழக மாநில அமைப்பாளர் ஸ்ரீ சேதுராமன் ஜி, மாநில பொறுப்பாளர் ஸ்ரீ சுதாகர் ஜி, ஆர் எஸ் எஸ் மாநில இணை மக்கள் தொடர்பு பொருப்பாளர் ஸ்ரீனிவாசன் ஜி, மதுரை கோட்ட இணைச் செயலாளர் ஸ்ரீ சேகர் மற்றும் கோட்ட அமைப்பாளர் ஸ்ரீ மகேஷ் ஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் விஷ்வ ஹிந்து பரிஷத் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here