காபூலில் சிக்கிய இந்தியர்கள் 168 பேரை இந்திய விமானப்படை விமானம் பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வந்தது.
ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் மீண்டும் கைபற்றியுள்ளனர். ஆப்கனில் பல்வேறு நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி இருந்தனர். அங்குள்ள இந்தியர்களை இந்தியா அழைத்து வர தொடர்ந்து சீரிய முயற்சி மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அவர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படையின் சி17 விமானம் நேற்று முன்தினம் இரவு ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதில் காபூலில் இருந்து நேற்று காலை 85 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.
இந்தியர்கள் காபூல் விமான நிலையம் வந்ததை அறிந்து கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் விமான நிலையத்தின் வெளிப்பகுதியை சுற்றி வளைத்தனர். 150 இந்தியர்களையும் தலிபான்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்
இதனைத் தொடர்ந்து இந்தியர்களை மீட்க இஸ்லாமிய பயன்கரவாதிகளான தலிபான்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. அதனால் இந்தியர்கள் விடுவிக்கப்பட்டதால் உடனடியாக இந்தியா அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இன்று காலை 107 இந்தியர்கள் உள்பட 168 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது,
விமானம் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் காலை 10.15 மணியளவில் தரையிறங்கி பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தது.