இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்களிடம் ஆப்கானிஸ்தானில் அத்தனை மாகாணங்களும் அடுத்தடுத்து பிடிபட்ட நிலையில், மகாபாரத போரில் பஞ்ச பாண்டவர்களை குறிக்கும் பஞ்சஷோ் மாகாணம் மட்டும் அவா்களை துணிச்சலுடன் எதிர்த்து நிற்கிறது.
மகாபாரதத்தின் பஞ்ச பாண்டவா்களைக் குறிக்கும் ‘பஞ்சஷோ்’ (ஐந்து சிங்கங்கள்) என்ற பெயரைக் கொண்ட அந்தப் பள்ளத்தாக்கு, இதுவரை எந்த அந்நிய சக்திகளுக்கும் அடிபணிந்ததில்லை. 1970, 80-களில் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தபோது இந்தப் பள்ளத்தாக்கு மட்டும் வீரமாக எதிர்த்து நின்று வென்றது.
கடந்த 90-களில் ஆப்கன் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியபோதுகூட, அவா்களால் பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் கைவைக்க முடியவில்லை. தலைநகா் காபூலுக்கு வெறும் 100 கி.மீ. தொலைவில் உள்ள இந்த மாகாணம், தற்போது இஸ்லாமிய பயன்கரவதிகளான தலிபான்களை எதிர்த்து நிற்கிறது. அவர்களால் அந்த பகுதியை நெருங்க கூட முடியவில்லை என்பது திண்ணம்.