அயோத்தி ராமர்கோவில் கட்டுவதற்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், 50 ஆயிரம் பேர் இணைந்து ரூ. 2 கோடி நன்கொடை வழங்கினர்

0
446

சென்னையில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கமிட்டியின் பொதுச்செயலாளரும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவருமான சம்பத்ராய், நேற்று சென்னை முகலிவாக்கத்தில் உள்ள ஆண்டாள் பக்தர்கள் பேரவை தலைவர் சொக்கலிங்கம் இல்லத்திற்கு சென்றார். அங்கு ஆண்டாள் பக்தர்கள் பேரவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மரத்தினால் செய்யப்பட்ட ராமர் கோவில் மாதிரி கட்டடத்தை சம்பத்ராய், நினைவு பரிசாக வழங்கினார். அப்போது பேசிய சம்பத்ராய், அயோத்தி வழக்கில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ராமர்கோவில் கட்டுமானப் பணிகள் நடைப்பெற்று வருகிறது. வரும் 2023 டிசம்பரில் கோவில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும். செங்கல், கம்பி இல்லாமல் செயற்கை பாறையில் துாண்கள் அமைத்து, 3 அடுக்குகளைக் கொண்டதாக இக்கோவில் கட்டப்படுகிறது. 400 ஆண்டுகள் நிலைத்து நிற்கத்தக்க அளவில் சிறப்பு சிமெண்ட் பயன்படுத்தப்படும். கோவில் திறப்பு விழாவில் 50 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், விஷ்வ ஹிந்து பரிஷத் தென் பாரத அமைப்புச் செயலாளர் பி.எம்.நாகராஜன், வட மாநில அமைப்புச் செயலாளர் ராமன், தமிழக அமைப்பு செயலர் வழக்கறிஞர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here