இந்திய எல்லைகளை துணிச்சலான நமது வீரர்கள் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். அதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு கொள்கைகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா உள்ளது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்து உள்ளார்.
இந்திய எல்லைகளை துணிச்சலான நமது வீரர்கள் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். அனைத்து நாடுகளும் வளர்ச்சிக்காகவும் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் பாடுபட வேண்டும். எல்லை ஆக்கிரமிப்பு கொள்கைகளை பின்பற்றக் கூடாது. இந்தியா எப்போதும் ஆக்கிரமிப்பு கொள்கைகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக உள்ளது. அமைதி மற்றும் நல்லிணக்கம் என்ற இந்த செய்தியை வழங்கும் நிலமாக லடாக் உள்ளது.
இப்பகுதி தன்னிறைவு பெறவேண்டும். இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களுக்கு ஒரு புதிய சந்தையை நாம் ஏற்படுத்த முடியும். தேசிய மற்றும் சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தலாம்.