நாடு முழுக்க அமலுக்கு வருகிறது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்ட்.

0
270

நாட்டில் உள்ள 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தகுதியான குடும்பங்களுக்கு நியாய விலைக் கடைகள் வாயிலாக மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு மாநிலமும் குடும்ப அட்டைகளை விநியோகித்து வருகின்றன.

அந்த அட்டைகளைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மட்டுமே உணவு தானியங்களைப் பெறும் சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், குடும்ப அட்டைகளைப் பெற்ற புலம்பெயா் தொழிலாளா்கள் உள்ளிட்டோா் நாட்டில் உள்ள எந்த நியாய விலைக் கடையிலும் உணவு தானியங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் இதுவரை 34 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இணைந்துள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் ஆகஸ்டிலும், தில்லி கடந்த ஜூலையிலும் இத்திட்டத்தை அமல்படுத்தின. அஸ்ஸாம், சத்தீஸ்கா் மாநிலங்கள் மட்டும் இத்திட்டத்தை இன்னும் செயல்படுத்தவில்லை. விரைவில் அவ்விரு மாநிலங்களும் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைச் செயல்படுத்தும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here