தமிழக அரசு, விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் விநாயகர் திருமேனி வைத்து வழிபட அனுமதி அளிக்காததால் ஆயிரக்கணக்கான விநாயகர் திருமேனி செய்து வருகின்ற பொம்மைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து சென்னையில் அந்தத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் விநாயகரை கொண்டு சென்று போராட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறை கைது செய்தது.
Source by; Vijayabharatham Weekly