பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் பாஜக கட்சி குஜராத்தில் பெறும் தொடர் வெற்றிகள் குறித்தும் பாரத நாடு முழுக்க பாதுகாப்பாக உணர்கின்றனர் என்றார்.
குஜராத்தில் நடந்த பாஜக கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை நிகழ்த்தினார். இதில் பாஜக கட்சி குஜராத்தில் பெறும் தொடர் வெற்றிகள் குறித்து பேசிஇந்தியா மீது கை வைக்க பயங்கரவாதிகள் அஞ்சுகிறார்கள். அவர்கள் எங்கே புகலிடம் தேடி இருந்தாலும் கூட.. பாதுகாப்பாக தலைமறைவில் இருந்தால் கூட இந்தியா மீது மட்டும் கை வைக்க அவர்கள் பயப்படுகிறார்கள். தீவிரவாதிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது பாஜக அரசு. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இப்படி இல்லை என்று தெரிவித்தார்.