சுதேசி இணைய வர்த்தகம்

0
460

இணையத்தில் வர்த்தகம் நடைபெறும் மிகப்பெரிய சந்தைகளில் பாரதமும் ஒன்று. ஆனால், இதில் பெரும்பாலும் சீன பொருட்களும் மற்ற வெளிநாட்டுப் பொருட்களும்தான் அதிகம் கிடைக்கின்றன. பாரதம் பொருளாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிலும் வளர வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் பாரதத்தில் தயாரான சுதேசி பொருட்களை பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். சுதேசி பொருட்களை மற்ற இணைய வர்த்தக தளங்களில் தேட நாம் சற்று மெனக்கெட வேண்டியுள்ளது. இந்த இடைவெளியை குறைக்கும் பொருட்டு, சுதேசி (www.swadesi.co) என்ற இணைய வர்த்தக தளம், செயலி மாதவ் திர், சிருஷ்டி திர் ஆகியோரால் துவங்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரான சுதேசி பிராண்டுகளை பிரபலப்படுத்துதல், அதில் இணைந்துள்ள தயாரிப்பாளர்கள், வியாபாரிகள்  வாழ்க்கையை மேம்படுத்துதல், மக்களிடம் சுதேசி விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த முயற்சி துவங்கப்பட்டுள்ளது. இதில், தற்போது சுமார் 1,000 விற்பனையாளர்கள் இணைந்துள்ளனர்.

Source By – Vijayabharatham Weekly

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here