திடீரென பசும்பாலை குடிக்காதே என பீட்டா இந்தியா அமைப்பு மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருகிறது. தாவரங்களிலிருந்து பாலை எடுத்து குடிக்க வேண்டுமாம். இது ஒரு வியாபார உத்தி. ஆனால் அமுல் நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. பசுவின் பாலுக்கும் தாவர பாலில் கிடைக்கும் ஊட்டச்சத்தும் ஒன்றல்ல. பாலில் உள்ள சக்தி தாவரங்களில் கிடையாது என்று உறுதியாக கூறி இருக்கிறது அமுல் நிறுவனம்.
பீட்டா இந்தியா அமைப்பின் வேலைதான் என்ன? நமது பாரத கலாச்சாரத்தை சீரழித்து மதமாற்ற திருடர்களுக்கு உறுதுணையாக வேலை செய்வதுதான் இதன் முக்கிய பணியாக இருந்து வருகிறது.
பாரதிய கலாச்சாரம் மனிதர்களையும் தாண்டி மிருகங்களையும் தாவரங்களையும் மற்ற உயிரினங்களையும் தெய்வமாகப் பார்ப்பதாகும். எந்த ஒரு உயிரினங்களுக்கும் தீங்கு இழைக்காதது நம்முடைய பாரதிய ஹிந்து கலாச்சாரம்.
பசுக்களை வளர்ப்பது அதை பாதுகாப்பது நமது நம்முடைய பாரம்பரியமான கலாச்சாரமாகும். கோவில்களில் யானைகள் வளர்ப்பதும் நமது பாரம்பரியம் ஆகும்.
ஆனால் மற்ற மதத்தவர்கள் ஆடுகளையும் மாடுகளையும் ஒட்டகங்களையும் கொடூரமான முறையில் உணவிற்காக வெட்டுவதை இந்த பீட்டா இந்திய அமைப்பு எந்த வித கண்டனமும் இதுவரைக்கும் தெரிவிக்கவில்லை. இதுவே அவர்களின் விஷமத்தனத்தின் சான்று.
பாரத மக்கள் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பசுக்களை வளர்த்தும் பாதுகாத்தும் அதனை கோமாதா என்றும் குலமாதா என்றும் காமதேனு என்றும் சுரபி என்றெல்லாம் போற்றி இருக்கிறார்கள். பாலுக்காக பசுவை துன்புறுத்துவது என்ற பேச்சே கிடையாது. இன்று பாரத நாட்டில் 10 கோடி மக்கள் பால் பண்ணைகளின் தயவில் வாழ்வாதாரம் பெறுகிறார்கள். பால் உற்பத்தி கூடாது என்றால் இவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள் என்ற கேள்விக்கு பதில் என்ன கேட்கிறது அமுல் நிறுவனம்.
பாரதிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க சர்வதேச சதிகாரர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பே பீட்டா இந்தியா அமைப்பாகும்.
நந்திஹனுமன்
nanthihanuman@gmail.com