தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர், இந்தியாவில் தங்கியிருந்ததாகவும், இந்தியாவில் இருந்து ஐந்து ஆண்டுக்கு முன் நாடு கடத்தப்பட்டவர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய பயங்கரவாதிகளான தலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள், நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் திரண்டனர். ஆகஸ்டில் 27ல் காபூல் விமான நிலைய வாயிலில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 183 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்தியவர் குறித்து ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, சவாத் அல் ஹிந்த்’ என்ற பத்திரிகையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர் அப்துர் ரஹ்மான அலோக்ரி. காஷ்மீர் விவகாரத்தில் பழிவாங்கும் வகையில் பசுக்களை வழிபடும் ஹிந்துக்களை கொல்வதற்காக அலோக்ரி இந்தியாவுக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.