அமெரிக்க கடற்படையில் முதன் முறையாக சீக்கிய அதிகாரி ஒருவருக்கு, ‘டர்பன்’ அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியரான சுக்பீர் டூர், 26, அமெரிக்க கடற்படையில் 2017ல் சேர்ந்தார்.
அவர், தன் மத வழக்கப்படி டர்பன் எனும் தலைப்பாகை அணிந்து பணியாற்ற விண்ணப்பித்தார். ஆனால், ‘போர் முனையில் சீருடை வேறுபாடு, கடற்படை வீரர்களின் ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றை பாதித்து, தோல்விக்கு வழி வகுத்து விடும் எனக் கூறி, டர்பன் அணிய அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் சுக்பீர் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து டர்பன் அணிய அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பித்தார். இந்த முறை அவரின் கோரிக்கை சில நிபந்தனைகளுடன் ஏற்கப்பட்டுள்ளது.