ஐநா பொதுச் சபையில் பாரதம் வழங்கிய தடுப்பூசிக்கு நன்றி

0
1264

ஐ.நா பொதுச் சபையின் 76வது மாநாட்டின் உயர் மட்டக் கூட்டத்தில் நேபாளம், பூடான், பிஜி, நைஜீரியா, கானா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பேசினர். அப்போது அவர்கள், கொரோனா தடுப்பூசி வழங்கியதற்கு, பாரதம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவித்தனர். பிஜி நாட்டின் பிரதமர் ஜோசையா பைனிமரமா பேசியபோது, ‘டெல்டா வைரசை சமாளிக்க மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பாரதம், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி வழங்கியதால் இது சாத்தியமானது. இதற்காக அந்நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். இதேபோல, செயின்ட் வின்சன்ட், கானா நாட்டு பிரதமர்களும் நன்றி தெரிவித்தனர். அதேசமயத்தில், கோவிஷீல்டு போட்ட பாரத தேசத்தவர்களை பிரிட்டனில் அனுமதிக்க மறுப்பு தெரிவிப்பதற்கு அவர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here