- ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்
அகில பாரதிய கார்யகாரி மண்டல்
பங்களாதேஷ் வன்முறை குறித்த தீர்மானம்
அண்மைக் காலத்தில் பங்களாதேஷ் ஹிந்துக்கள் மீது வன்முறை வெறி வெடித்துப் பாய்ந்தது குறித்து அகில பாரதிய காரியகாரி மண்டல் ஆழ்ந்த கவலை கொள்கிறது.; அங்குள்ள ஹிந்து சிறுபான்மையினர் மீது தொடர்ந்து வெறித்தனமான தாக்குதல்கள் நடப்பதை வன்மையாகக் கண்டனம் செய்கிறது; இந்தத் தாக்குதல்கள் பங்களாதேஷை மேலும் மேலும் இஸ்லாமிய மயமாக்க ஜிஹாதி குழுக்கள் செய்யும் பெரியதொரு சதியின் அங்கம் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீதும் ஹிந்து கோயில்கள் மீதும் வன்முறை தாக்குதல் தணியாமல் நீடிக்கிறது.
அண்மையில் துர்கா பூஜையின் போது நிறைய இடங்களில் வகுப்பு வன்முறை வெடித்தது. பல நிரபராதிகளான ஹிந்துக்கள் கொல்லப்பட்டார்கள்; நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தார்கள; ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடு வாசல்களை இழந்தன. ஹிந்து சமுதாய இளம்பெண்களும் மகளிரும் தாக்கப்பட்டார்கள். கோயில்களும் துர்கா பூஜை மண்டபங்களும் சூறையாடப்பட்டன; இதெல்லாம் இரண்டே வாரங்களில் நடந்தேறியுள்ளன.
சமுதாயத்தில் வகுப்பு வெறியை தூண்டி விடுவதற்காக பொய் செய்தி பரப்புகிறவர்கள் கைது செய்யப்பட்ட போது, இந்த தாக்குதல்கள் எல்லாமே இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் நன்கு திட்டமிடப்பட்ட சதி என்பது வெளிச்சத்திற்கு வந்தது. அடிக்கடி இலக்கு வைத்து தாக்குவது என்பது பாரதம் துண்டாடப்பட்ட காலத்திலிருந்தே வேகமாக குறைந்து வரும் ஹிந்து சிறுபான்மையினர்களை ஒழித்து துரத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கூடிய திட்டமிட்ட முயற்சி.
தேசப் பிரிவினையின் போது கிழக்கு வங்காளத்தில் ஹிந்துக்களின் ஜனத்தொகை சுமார் இருபத்தெட்டு சதவீதம்;
அது தேய்ந்து தேய்ந்து இப்போது சுமார் எட்டு சதவீதத்திற்கு வந்துள்ளது. ஜமாத்தே இஸ்லாமி (பங்களாதேஷ்)
போன்ற இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் செய்யும் அடாவடிகளால் ஹிந்துக்கள் பாரதத்திற்கு பெரிய எண்ணிக்கையில் குடிபெயரும் நிலை ஏற்பட்டது; இது பிரிவினைக் காலத்திலிருந்தே நடைபெற்று வருகிறது; குறிப்பாக 1971 ல் நடந்த போரின் போது இது காணப்பட்டது. இந்த அமைப்புகள் பங்களாதேஷின் வகுப்பு
நல்லிணக்கத்தை சீர்குலைக்க, அங்கு வசிக்கும் சிறுபான்மை மக்களிடையே பத்திரமற்ற மனநிலையை
ஏற்படுத்த தொடர்ந்து முயன்று வருகின்றன.
பங்களாதேஷில் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து அதிகரிக்கும் வன்முறை சம்பவங்களை தடுக்க அந்த நாட்டின் அரசு கண்டிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காரியகாரி மண்டலின் கருத்து. ஹிந்து விரோத வன்முறைகளில் இறங்குபவர்களுக்கு அந்நாட்டு அரசு கடும் தண்டனை விதிப்பதன் மூலம், தாங்கள் பங்களாதேஷில் தங்களுக்கு உரிய உரிமைகள் பெற்று கௌரவத்துடன் பத்திரமாக வாழ முடியும் என்பதற்கான உத்தரவாதம் அங்குள்ள ஹிந்துக்களுக்கு கிடைக்கும்.
இவ்வளவெல்லாம் நடந்தும், தங்களை மனித உரிமைகளுக்கான காவல் நாய்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்கள் வாயே திறக்காமல் இருப்பதை காரியகாரி மண்டல் கண்டனம் செய்கிறது. வன்முறையை கண்டனம் செய்ய சர்வதேச சமுதாயம் முன்வரட்டும்; பங்களாதேஷ் ஹிந்துக்கள், புத்த மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பையும் பத்திரத்தையும் கோரி குரல் கொடுக்கட்டும்; பங்களாதேஷ் ஆனாலும் சரி, உலகின் வேறு எந்தப் பகுதி ஆனாலும் சரி, தீவிர இஸ்லாமிய சக்திகள் தலை தூக்குவது ஜனநாயகத்திற்கும், அமைதியை விரும்பும் தேசங்களின் மக்களுடைய மனித உரிமைகளுக்கும் கொடிய ஆபத்து என்று காரியகாரி மண்டல் எச்சரிக்கிறது.
இந்த தாக்குதல்கள் குறித்தும் பங்களாதேஷில் மனித உரிமை மீறல்கள் குறித்தும் உலகம் முழுவதிலும் ஹிந்துக்களுக்கும் சங்கங்களுக்கும் ஏற்பட்டுள்ள கவலையை பங்களாதேஷ் அரசுக்கு, ராஜிய தொடர்புகள்
அனைத்தையும் பயன்படுத்தி பாரத அரசு, தெரிவிக்க வேண்டும் என்று காரியக்காரி மண்டல் பாரத அரசைக்
கோருகிறது. இஸ்லாமிய வன்முறைக்கு இலக்கானவர்களுக்கு தோள் கொடுத்ததற்காகவும் பங்களாதேஷ்
ஹிந்து சகோதரர்களுக்கு எல்லா விதத்திலும் ஆதரவு கொடுத்ததற்காவும் ஹரே கிருஷ்ணா இயக்கம் (இஸ்கான்),
ராமகிருஷ்ண மிஷன், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளுக்கும் சங்கங்களுக்கும் காரியகாரி மண்டல் தனது நன்றியறிதலைப் பதிவு செய்கிறது; சவால் நிறைந்த, கடினமான இந்த காலகட்டத்தில் பங்களாதேஷில் கொடுமைக்குள்ளான சிறுபான்மையினருக்கும் ஹிந்துக்களுக்கும் ஆதரவாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமும் முழு ஹிந்து சமுதாயமும் தொடர்ந்து துணை நிற்போம் என்று உறுதி கூறுகிறது.
Home Breaking News ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் அகில பாரதிய கார்யகாரி மண்டல் பங்களாதேஷ் வன்முறை குறித்த தீர்மானம்