தேசிய விருதுக்கு அவமானம்

0
883

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர். விஜய் சேதுபதியுடன் மகா காந்தி போதையில் செல்ஃபி எடுக்க முயன்றதாகவும், உதவியாளர் அதனை மறுத்ததால் தாக்கியதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன. மகா காந்தியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது மகா காந்தி, “நான் விஜய் சேதுபதியிடம் தேசிய விருது வாங்கியதற்கு வாழ்த்துகள் என்றேன். இது தேசமா என்று கேட்டார். குரு பூஜைக்கு வந்தீர்களா என்றேன்.அதற்கு அவர் குரு? என்றார். அப்போது என்னை அவர்கள் தாக்கினார்கள். அதனால் நான் திருப்பித் தாக்கினேன். விமான நிலைய சி.சி.டி.வி காட்சிகளை கேட்டிருக்கிறேன். அவர்கள் என்னை தாக்கியதை நான் நிருபிப்பேன்” என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தவர்கள் இது தேசமா என்று தேசத்தையும் தேவர் திருமகனாரின் குருபூஜையையும் இழிவுபடுத்தியதற்கு கண்டனம் தெரிவிப்பார்களா? இது தேசமா எனக் கேட்டவருக்கு தேசிய விருது வழங்கியது விருதுக்கும் தேசத்துக்கும் அவமானம் எனவே அதனை அரசு அவரிடம் இருந்து திரும்பப் பெறுவதுதான் முறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here