இந்திய ரயில்வே ஆகஸ்ட்-2020 முதல் “கிசான் ரயில்” முதல் என்ற ரயிலை இயக்கி வருகிறது. இந்த ரயிலின் மூலம் காய் கறிகள், பழங்கள் பால்,மீன் மற்றும் மாமிசம் முதலான எளிதில் கெட்டுபோகும் உணவுகளை ஏற்றி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர்2021 வரை இந்த ரயில்கள் 1586 முறை இயக்கப்பட்டு மொத்தம் 5.2 லட்சம் டன் உணவு பொருட்கள் நாட்டின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.
இந்த ரயில்கள் ஆந்திரா பிரதேசம்,அஸ்ஸாம்,குஜராத்,கர்நாடகா,மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா,பஞ்சாப்,தெலுங்கனா,திரிபுரா,உத்தரபிரதேசம்,மேற்கு வங்கம் முதலான மாநிலங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் பொருட்களை ஏற்றும் இடங்கள் மற்றும் கால அட்டவணைகள் மத்திய விவசாயதுறை அமைச்சகம், மீன் வளத்துறை அமைச்சகம் மாநில அரசாங்கங்கள் வியாபாரிகள் மற்றும் மண்டிகள் ஆகியவற்றின் ஆலோசனைப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
-மத்திய ரயில்வே,மின்னணு மற்றும் தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் எழுது மூலம் அளித்த பதில்