வங்க தேசத்தை சேர்ந்த 57 பேர் திருப்பி அனுப்ப பட்டனர்- உச்ச நீதி மன்றத்தில் கேரள அரசு தகவல்

0
387

       கேரளாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 57 வங்க தேசத்தவர்கள் வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக  கேரள அரசு நவம்பர் 22 அன்று  உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

        கேரளாவில் எல்லை தாண்டிய அச்சுறுத்தல் இல்லை என்றும், போலியான பயண ஆவணங்களைப் பயன்படுத்தியோ அல்லது ரகசியமாகவோ நாட்டிற்குள் நுழைந்த வெளிநாட்டினரைக் கண்டறிய மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

     கேரளாவில் எல்லை தாண்டிய அச்சுறுத்தல் இல்லை, ஆனால் மாநிலம் பரந்த அளவிலான கடலோரப் பகுதிகளைக் கொண்டுள்ளது. கடலோர காவல்துறை, கடலோர ஜாக்ரதா சமிதி மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றின் திறன்மிக்க ஒத்துழைப்பால், கடல் வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் வருகையை உன்னிப்பாகக் கண்காணிக்க சம்பந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று அரசாங்கம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

        பங்களாதேஷ் மற்றும் ரோஹிங்கியாக்கள் உட்பட அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும், ஊடுருவல்காரர்களையும் ஓராண்டுக்குள் கண்டறிந்து, தடுத்து வைத்து, நாடு கடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாயா தாக்கல் செய்த மனு மீது கேரள அரசு ஆவணம் தாக்கல் செய்தது. 

        கடந்த ஐந்து ஆண்டுகளில், சட்டவிரோதமாக  வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் அல்லது ரோஹிங்கியாக்களுக்கு எதிராக அத்து மீறி நுழைபவர்களுக்கு எதிரான  சட்டம், 1956 இன் கீழ் எந்த வழக்கும் பதிவாகவில்லை என்று கேரள அரசு தெளிவுபடுத்தியுள்ளது. 

        கடந்த ஐந்து ஆண்டுகளில், கைது செய்யப்பட்ட 70 வங்க தேசத்தவர்களில் , 57 பேர் பங்களாதேஷுக்கு நாடு கடத்தப்பட்டனர், மீதமுள்ள 13 பேர் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

        ஊடுருவல் மாஃபியாக்களுடன் தொடர்பு கொண்டுள்ள மற்றும் ரோஹிங்கியாக்கள்வங்காளதேசத்தினர் மேற்கு வங்காளத்திற்குள் ஊடுருவ உதவுபவர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக்கண்டறிந்து அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று உபாத்யாயாவின் மனுவில் கோரப்பட்டுள்ளது.

 

Source:vsk Bharath

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here