பிபின் ராவத் மரணத்தை – கொண்டாடும் பாகிஸ்தான் ஆதரவு கை கூலிகள்

0
270

பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் தமிழகத்தின் குன்னூர் அருகே புதன்கிழமை விபத்துக்குள்ளானதில் அவர்,அவர் மனைவி மற்றும் 11 பேர்  இறந்தனர். ஒட்டுமொத்த தேசமும் சோகத்தில் உள்ள நிலையில் பாகிஸ்தான் கைக்கூலிகள் இதற்கு மகிழ்வதும் கேலி செய்வதுமாக உள்ளனர்.

        ராவத் மற்றும் அவரது மனைவி இறந்த செய்தி வெளியில் தெரிய வந்த போது ஒரு ட்விட்டர் பயனர், பல இஸ்லாமியர்கள் எமோஜியுடன்(emoji) சிரிக்கும் ஸ்கிரீன் ஷாட்டை வெளியிட்டு, தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.

       பிற்பகலில் விபத்து நடந்த உடனேயே ராவத் இறந்த செய்தி உறுதி செய்யப்படாததால், பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொருவரான ஜீஷன் அப்ரிடி ட்விட்டரில், “ஜெனரல் பிபின் ராவத் உயிர் பிழைத்ததால் வருத்தம்” என்று தெரிவித்துள்ளார்.

        இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த முஹம்மது அகிஃப் என்பவர் ராவத்தை சபித்து,  “நித்திய நரகத்தில் ஓய்வெடு ” என்றும் ட்வீட் செய்துள்ளார்.

      தன்னை ஒரு முஸ்லீம் என்று அடையாளப்படுத்தும் மற்றொரு ட்விட்டர் பயனர், அவர் ஒரு “இந்துத்துவா ரசிகர்” அல்ல என்று ராவத்தின் மரணம் குறித்து வருத்தப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை, அவருக்கு பதிலாக வேறு யாராவது வருவார்கள் என்று கூறினார். அவர் மேலும் கூறினார், “இது எங்களுக்கு மினி ஈத்…” என்றும் கூறியுள்ளார்.

      இதுமட்டுமின்றி, ஹெலிகாப்டர் விபத்தை பார்த்து சிரித்துவிட்டு, ராவத்தின் மரணத்தை கேலி செய்து மீம்ஸ் போட்டவர்களும் உள்ளனர்.

      பாகிஸ்தானைச் சேர்ந்த வகாஸ் அஞ்சும் என்பவர், ஜெனரல் பிபின் ராவத் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்திய விமான படை  இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

      2022 உத்தரப் பிரதேசத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி “அனுதாபம்” பெற விரும்பியதால், விபத்துக்குப் பின்னால் மோடி இருப்பதாக மற்றொருவர் பதிவிட்டு இருந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here