ரஃபி மார்க்கில் அமைந்துள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொண்ட ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சா சர்கார்யவாஹ் அருண் குமார் இவ்வாறு கூறியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாடு தழுவிய ஸ்ரீ ராம் ஜென்மபூமி நிதி சமர்பன் அபியானின் அனுபவ அறிக்கைகளின் அடிப்படையில் ‘சப் கே ராம்’ புத்தகத்தை வெளியிடும் போது “(ராமர் கோவிலுக்குக்கு) நிதியளிக்கும் இயக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் நடந்துள்ளது” என்றும் கூறியுள்ளார். “நாடு முழுவதும் இதில் பங்கு கொண்ட பிரச்சாரகர்களின் அனுபவங்கள் மிகவும் உத்வேகம் அளிகும்படி உள்ளன,இந்த அனுபவங்களின் தொகுப்பாக “சப் கே ராம்” எனும் இந்த நூல் வெளி வந்துள்ளது. இந்துத்துவ உணர்வு குறைந்து வருகிறது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்கு, நிதி அளிக்கும் இந்த இயக்கமே பதில். ஸ்ரீ ராம ஜென்மபூமியின் இயக்கம் இந்து சமுதாயத்தின் சுய-உணர்தல். அவர் தனது சக்தியை அறிந்திருக்கிறார். ஸ்ரீ ராம ஜென்மபூமிக்கான இயக்கங்களால் இந்து சமுதாயம் விழித்தெழுந்துள்ளது,ராமர் கோவில் இயக்கம் இந்துக்களின் அர்ப்பணிப்பால் நடந்ததே தவிர வேறு எந்த ஒரு எதிர்வினையாலும் நடக்க வில்லை. நல்லிணக்க சமுதாயம்தான் எங்களின் கனவு. நமது சகிப்புத்தன்மையின் மூலம் வீரமே மட்டுமே அன்றி கோழைத்தனமல்ல” என்றும் அவர் கூறினார்.
விஎச்பியின் யூனியன் இணைப் பொதுச் செயலாளர் டாக்டர். சுரேந்திர ஜெயினும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உஅரியற்றினார்.