வங்காளத்தில் பெரிதும் கொண்டாடப்படும் துர்கா பூஜையை யுனெஸ்கோஅதன் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளது. இதன் மூலம் மேற்கு வங்க மாநிலத்தின் மிகப்பெரிய திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
“துர்கா பூஜை சமயம் மற்றும் கலையின் மிகசிறந்த வெளிப்பாடாகும். இது வங்காளத்தின் பிரம்மாண்டமான ஒரு திருவிழாவாகும். இது சமயம்,வகுப்பு,இனம் போன்ற பேதங்களைக்கடந்து கொண்டடப்படக்கூடிய திருவிழா ஆகும்” என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
பாரம்பரிய யோகா மற்றும் கும்பமேளா முறையே 2016 மற்றும் 2017ல் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.