மத்திய அமைச்சரவை, ரூபே டெபிட் கார்டுகளை மேம்படுத்துவதற்கான ஊக்கத் திட்டத்திற்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI முறைகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் மதிப்பில் குறிப்பிட்ட சதவீதத்தை செலுத்துவதன் மூலம் இதை செயல் படுத்தும் வங்கிகள் அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்படும். இதெற்கென இந்த நிதியாண்டில் சுமார் ருபாய் 1300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம், வலுவான டிஜிட்டல் பேமெண்ட் சூழலை உருவாக்குவதற்கும், ரூபே டெபிட் கார்டு மற்றும் BHIM-UPI டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்குவிப்புகளை வங்கிகள் பெறுவதற்கும், நாட்டில் அனைத்துத் துறைகளிலும் டிஜிட்டல் பணப்பரிமாற்றங்களை மேலும் ஆழப்படுத்துவதற்கும் உதவும்.
முறையான வங்கி மற்றும் நிதி அமைப்புக்கு வெளியே உள்ள வங்கியற்ற மற்றும் விளிம்புநிலை மக்களும் அணுகக்கூடிய டிஜிட்டல் முறைகளில் பணபரிமாற்றம் செய்யவும் இது உதவும்.