இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த  எண்ணிக்கை 86,415 ஆகக் குறைந்துள்ளது-சுகாதாரத்துறை தகவல்

0
773

     மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளி கிழமை வெளியிட்ட  தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்   7,447 பேர்  புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ள ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,47,26,049 ஆனது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை  86,415 ஆகக்குறைந்துள்ளது. காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, 391 புதிய இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 4,76,869 ஆக உயர்ந்துள்ளது.

   கடந்த 50 நாட்களாக புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளின் தினசரி அதிகரிப்பு 15,000 க்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

   சிகிச்சை முடிந்து குணமானோர்  98.38 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது மார்ச் 2020 க்குப் பிறகு மிக அதிகம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here