இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிரசார் பாரதி மற்றும் கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் இன்று கையெழுத்திட்டன. இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சிலுடன் (ICCR) தொடர்புடைய புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனின் தேசிய மற்றும் சர்வதேச சேனல்களில் ஒளிபரப்பப்படும். நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் டிடி நேஷனல், டிடி இந்தியா, தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்கள் மற்றும் பிரசார் பாரதி செய்தி சேவைகள் ஆகியவற்றில் வாராந்திர நிகழ்ச்சிகளாக இடம் பெறும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், சிறந்த இந்திய கலாச்சாரத்தை தேசிய மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு கொண்டு வருவதையும், கலைஞர்களுக்கு டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் டிசம்பர் 2021 முதல் டிசம்பர் 2024 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும்.