சுற்றுலாவை பாதிக்கும் என்பதால்கோவாவில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு இல்லை என அம்மாநிலத்தின் முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் மாநிலத்தில் கொரோனா நிலவரம் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாகவும், வரும் ஜனவரி 3ம்தேதி நடக்கும் கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.