ஹிந்துக்கள் சிறுபான்மையாக வாழும் பாகிஸ்தான், வங்கதேசம்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அவர்கள் பெரும் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். தாங்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படாமல் நிம்மதியாக வாழும் பொருட்டு அவர்கள் இந்தியாவிற்கு தப்பி வருகின்றனர்.
அவ்வாறு நாடு திரும்பிய 43000 பேர் டெல்லியில் பல்வேறு பகுதிகளில்உள்ள முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்களின் மேம்பாட்டிற்கென பல்வேறு நலத்திட்ட பணிகளை சேவா பாரதி செய்து வருகிறது. அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி,பெண்களுக்கு தையல் பயிற்சிகள் ஆண்களுக்கு சுயதொழில்களுக்கான உதவி போன்றவற்றை சேவா பாரதி அமைப்பு செய்து வருகிறது.