கோயில்கள் விரைவில் அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படும் என கர்நாடக முதலவர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதற்கான சட்டம் அடுத்து வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் குஜராத்தில் நடை பெற்ற விஹெச்பி அறங்காவலர் மற்றும் நிரவாக குழு கூட்டத்தில் அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.