சுயசார்பு இந்தியாவின்ஒரு முயற்சியாக 351 உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய பாதுகாப்பு அமைச்சகம் தடை

0
380

       பாதுகாப்பு துறையில் இந்தியாவை தற்சார்பு அடைய செய்வதற்கான ஒரு முயற்சியாக பாதுகாப்பு துறை 351 உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது. 172 பொருட்கள் இறக்குமதி செய்ய  டிசம்பர் 2022 முதல் தடை விதிக்கப்படும். 89 பொருட்கள் இறக்குமதி செய்ய டிசம்பர் 2023 முதல் தடை விதிக்கப்படும். 90 பொருட்கள் இறக்குமதி செய்ய டிசம்பர் 2024 முதல் தடை விதிக்கப்படும். இறக்குமதி செய்யப்படும் இந்த 351 பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பணி இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் தொடங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here