சென்னையில் கன மழை: மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழப்பு

0
538

      சென்னையில் வியாழன் மாலை பெய்த கன மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது. மின்சாரம் தாக்கி 3 பேர் உயிர் இழந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் அலுவலகங்கள்,பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 24×7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here