அமெரிக்காவில் கொரோனா தொற்று பெருகி வரும் நிலையில் அமெரிக்காவில் இந்தியாவின் தயாரிப்பான கோவக்சினை அனுமதிக்க வேண்டும் என்று பிரபல டென்னிஸ் வீரர் ஜிம்மி கானர்ஸ் கோரியுள்ளார்.
ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “பைசர்,J&J,மாடர்னா போன்றவற்றுக்கு அனுமதி வழங்கும் போது கோவக்சினுக்கும் அனுமதி வழங்கலாமே” என அவர் கூறியுள்ளார்.
அவசரத்தேவைகளுக்காக கோவக்சினை பயன்படுத்தலாம் என கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பு (WHO) அனுமதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.