திரிபுரா விமான நிலையத்தின் ஒருகிணைந்த முனைய கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

0
515

திரிபுராவில் பிர் பிக்ரம் விமான நிலையத்தின் ஒருகிணைந்த முனைய கட்டிடத்தை மோடி திறந்து வைத்தார். வித்யா ஜோதி மிஷன் திட்டத்தின் கீழ் 100 பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தையும் அவர் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப், துணை முதல்வர் ஜிஷ்ணு தேப் பர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம், சுமார் 450 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது, இது 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள நவீன வசதிகளுடன் கூடிய அதிநவீன கட்டிடமாகும். நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் நவீன வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் முயற்சிக்கு இணங்க புதிய முனையக் கட்டிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here