சட்ட திருத்தம் தொடர்பாக எம்.பிக்களுக்கு உள்துறை அமைச்சர் கடிதம்

0
209
  1. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வது தொடர்பாக எம்.பி.க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடிதம் எழுதியுள்ளார்.

மத்தியில் உள்ள பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் விரைவான நீதி கிடைக்க உறுதி பூண்டுள்ளது. எனவே குற்றவியல் சட்டங்களில் விரைவான மாற்றங்களைகொண்டு வர தீர்மானித்துள்ளது.

எழுபது ஆண்டு கால அனுபவத்தின் அடிப்படையில்  இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) 1973 மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் 1872 உள்ளிட்ட சட்டங்களை. நமது மக்களின் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப மதிப்பாய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது.” என்று எம்.பி.க்களுக்கு ஷா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here