தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர், இதழாசிரியர் எனப் பல ஆளுமை கொண்ட வெ சாமிநாத சர்மாவின் பிறந்த தினம் இன்று-ஜனவரி 7.
பிறப்பும் கல்வியும்
தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெங்களத்தூர் என்னும் சிற்றூரில் 1895 செப்டம்பர் 17 அன்று பிறந்தார். தந்தை முத்துச்சாமி ஐயர். தாயார் பார்வதி அம்மாள். தம் பள்ளிப் படிப்பை செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இவர் பல மொழிகள் கற்றுப் புலமை அடைந்தார்.
தொழில்
சர்மா துவக்கத்தில் தேசபக்தன் இதழிலும், பின்னர் திரு.வி.கவின் நவசக்தி இதழிலும் பணியாற்றினார். அங்கே சுமார் பன்னிரெண்டு ஆண்டுகாலம் உதவி ஆசிரியராக இருந்தார். சென்னை மாகாண முன்னாள் பிரமதமரான டி. பிரகாசம் அவர்கள் நடத்திய தமிழ் பத்திரிக்கையான ஸவராஜ்யாவிலும் பணியாற்றினார். பின்னர் பர்மாவுக்கு சென்று அங்கு பத்தாண்டுகள் இருந்தார். அங்கு ரங்கூன் நகரத்தில் ஜோதி என்ற இதழைத் துவக்கி நடத்திவந்தார்.[2] இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் பர்மாமீது படையெடுத்ததால் அங்கிருந்து குடும்பத்துடன் பல இன்னல்களை அனுபவித்து சென்னை வந்து சேர்ந்தார். இவர் பர்மாவில் இருந்தபோதே பல நூல்களை எழுதினார். இங்கு வந்தும் பல நூல்களை எழுதினார். இவரது நூல்களுக்காகவே சொக்கலிங்கம் செட்டியார் என்பவர் பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம் என்ற பதிப்பகத்தை துவக்கினர்.
மறைவு
1978 ஆம் ஆண்டு சனவரி ஏழு அன்று கலாசேத்திராவில் காலமானார்.
இவரைப்பற்றி கண்ணதாசன்
“உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவியல் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.” என்று இவரைப்பற்றி கண்ணதாசன் கூறியுள்ளார்.
படைப்புகள்
1.நமது ஆர்யாவர்த்தம் 2.சீனாவின் வரலாறு. 3.ரஷ்யாவின் வரலாறு 4.கிரீஸ் வாழ்ந்த வரலாறு. 5.ஸ்பெயின் குழப்பம் 6. ராஜ தந்திர யுத்த களப் பிரசங்கங்கள் 7.காந்தி யார். 8.கமால் அத்தாதுர்க் (Mustafa Kemal Atatürk) 9.பிளேட்டோவின் ‘அரசியல்’ 10.மாஜினி 11.ஸன்யாட் சென் 12.பாலஸ்தீனம் முதலான நூல்களை இவர் எழுதியுள்ளார்.