மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டிலேயே முதல் திறந்த வெளி பாறை அருங்காட்சியத்தை வியாழன் அன்று திறந்து வைத்தார். CSIR-NGRI வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதில் 330 கோடி ஆண்டு முதல் 5.5 கோடி ஆண்டு வரை பழமையான பாறைகள் உள்ளன. பொதுமக்கள் பூமியின் தன்மைகளை பற்றி அறிந்து கொள்ள இந்த அருங்காட்சியகம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
75 வது சுதந்திர ஆண்டை கொண்டாடி வரும் வேளையில் இது போல நாடு முழுதும் 75 அருங்காட்சியகங்களை அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.