கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டது. இதன்படி உத்தரப்ரதேசத்தில் பிப்ரவரி10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். பஞ்சாப்,உத்தரகண்ட்,கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14 தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்,மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 7ம் தேதி இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மார்ச் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா சனிக்கிழமை அன்று செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டு பேசினார்.