மத்திய அரசின் தனியார்மய கொள்கையை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறும் என்று ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம்(பிஎம்எஸ்) ஹைதராபாத்தில் நடை பெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் வரும் நவம்பரில் நடை பெறும் இப்போராட்டத்தில் பல்வேறு துறைகளில்பணிபுரியும் பாதிக்கப்படக்கூடிய சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று பிஎம்எஸின் செயலாளர் கிரிஷ்சந்திர ஆச்சர்யா தெரிவத்துள்ளார்.
வரும் நாட்களில் இது குறித்து பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று பிஎம்எஸ் திட்டமிட்டுள்ளது.
இது குறித்துப் ஏஎன்ஐ இடம் தொலைபேசியில் பேசிய செயலாளர் கிரிஷ்சந்திர ஆச்சர்யா “ஹைதராபாத்தில் ஒரு நாள் கூட்டமும் ஒரு நாள் கருத்தரங்கமும் நடை பெற்றது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இவற்றில் நிலக்கரி,தொலைபேசி,ரயில்வே,பாதுகாப்பு,தபால் துறை,சுரங்கம்,வங்கி,காப்பீடு,இரும்பு,சிமெண்ட் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசி ஹெச்ஏஎல்,பிஹெச்ஈஎல் ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.”என்று தெரிவித்தார்.
“வரும் பிப்ரவரி 11,12,13 தேதிகளில் ஓடிசாவில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டத்தில் நவம்பரில் நடைபெறும் இப்போராட்டதிற்கானதேதிகள் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இப்போராட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு பகுதிகளில் ஏழு கருத்தரங்குகள் நடத்தவும் பிஎம்எஸ் திட்டமிட்டுள்ளது.
முதல் கருத்தரங்கு ஹைதராபாத்தில் நடைபெற்றது. மீதமுள்ள கருத்தரங்குகள் லக்னோ,போபால்,பெங்களுருவில் மற்றும் ராஞ்சியில் நடைபெறும்.இந்த கருத்தரங்குகளில் பொருளாதார நிபுணர்கள் அழைக்கப்பட இருக்கிறார்கள்.
Home Breaking News மத்திய அரசின் தனியார்மய கொள்கையை எதிர்த்து போராட்டம்:ஆர்.எஸ்.எஸ். கிளை அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் அறிவிப்பு