கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து கர்ப்பிணிப் பெண் ஊழியர்கள் மற்றும் ஊனமுற்ற ஊழியர்களுக்கும் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை வழங்கிய வழிகாட்டுதல்கள் குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஊனமுற்ற பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் அது கட்டுப்பாட்டு மண்டலம் இல்லை என்று மறுஅறிவிப்பு செய்யப்படும் வரை அலுவலகத்திற்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பிறகு மேற்கண்ட முடிவுகள் எட்டட்ப்பட்டுள்ளன.
Home Breaking News கர்ப்பிணிப் பெண்கள், ஊனமுற்றோர் அலுவலகத்திற்குச் செல்லத் தேவையில்லை: கோவிட் நிலைமை உத்தேசித்து மத்திய அரசு முடிவு