பல்கலைக்கழகங்களை அபகரித்து கழக குடும்பச் சொத்தாக்கத் திட்டமா?- டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி

0
540

துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர்களை அகற்றி விட்டு,பல்கலைக்கழகங்களை அபகரித்து கழக குடும்பச் சொத்தாக்கத் திட்டமா? என டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
’தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கும் பங்கு இருக்க வேண்டும்; அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும், மு.க.ஸ்டாலின் அவர்களும் கடந்த 06.01.2022 அன்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்கள். உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் முதல்வரின் இந்த அறிவிப்புகள் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர்களை அகற்றி விட்டு அவற்றை அபகரிக்கவும்,பல்கலைக் கழகங்களை குடும்பச் சொத்தாக்கி ஊழல் குப்பை மேடாக்குவதற்கும்இலட்சோபலட்சம் ஏழை, எளிய, கிராமப்புற தமிழக மாணவர்களின் வாழ்க்கையைச் சீரழிப்பதற்குமான ஒரு முயற்சியே என டாக்டர் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here