கொரோனா தொற்று உள்ளோருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அறிகுறிகள் இல்லாதபட்சத்தில் அவர்களுக்கு பரிசோதனை தேவை இல்லை என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் அறிவித்துள்ளார்.
காய்ச்சல்,சளி,இருமல்,உடல்வலி உள்ளவர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். மேலும் கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இது போல அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அவர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு இது போல அறிகுறிகள் இல்லையெனில் அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அறிகுறிகள் இல்லை என்றாலும் பரிசோதனை செய்வது அவசியம் என்றும் அவர் கூறினார்.