ஆதி சங்கராச்சாரியார் பிறந்த இடம் தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்படும்-தேசிய நினைவு சின்னங்களின் ஆணையத்தின் தலைவர்

0
417

கேரளாவில் உள்ள ஆதி சங்கராச்சாரியார் பிறந்த இடத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
இது தொடர்பாக தேசிய நினைவுச்சின்னங்கள் ஆணையத்தின் தலைவர் (NMA) தருண் விஜய் கடந்த வாரம் கேரளா கவர்னர் ஆரிப் முஹம்மத் கானை சந்தித்துபேசினார். “இந்தியாவின் மிகப் பெரிய மகான்களில் ஒருவரின் பிறந்த இடத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பது” தொடர்பாக NMA க்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக கான் உறுதியளித்ததாக விஜய் கூறினார்.
எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆதி சங்கராச்சாரியார் பிறந்த இடத்தின் முக்கியத்துவம் குறித்த விரிவான அறிக்கையை தயார் செய்து, உரிய பரிசீலனைக்காக தொல்லியல் துறைக்கு அறிக்கை சமர்பிக்க இருப்பதாக தருண் விஜய் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here