வல்லரசாகும் இந்தியா-புதுவை முதல்வர் பேச்சு

0
673

புதுவையில் நேற்று நடைபெற்ற இளைஞர் தின விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை அடைவதன் மூலம் இந்தியா வல்லரசாகிக்கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாடு முழுவதும் ஊக்குவிக்கப்படுகின்றன. நமது பிரதமர் திருக்குறளின் வழிகாட்டுதலை ஏற்று செயல்படுகிறார். எனவே, நாம் வல்லரசு நிலையை நோக்கி செல்கிறோம்.பொதுவாக மக்கள் தொகை என்பது வெறும் எண்ணிக்கை மற்றும் பொறுப்பாக் கருதப்படுகிறது. ஆனால் அது திறமையான பணியாளர்களாகவோ, நாட்டிற்கு பங்களிக்கக் கூடிய சக்தியாகவோ மாற்றும்போது, அந்த எண்ணிக்கையே ‘மக்கள் தொகை பங்காக’ மாறுகிறது.

‘ஆத்ம நிர்பர் பாரத்’நடைமுறைக்கு வந்த பிறகு அதுதான் நடக்கிறது, புதுச்சேரியிலும் அதுதான் நடக்கும். இவ்விழா புத்துணர்ச்சியை அளித்து, புதிய யோசனைகள், படைப்புகளுக்கு இளைஞர்களை அழைத்துச் செல்லட்டும். இளைஞர்கள் உலகிற்கு முன்மாதிரியாக மாற வேண்டும் என்று புதுவை முதல்வர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here