பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகத்தில் 11 மருதுவக்கல்லூரிகளை திறந்து வைத்தார். மேலும் செம்மொழி தமிழ் நிறுவனத்தையும்(CICT) அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.
மாநிலத்தில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிதாக 1,450 மருத்துவ இடங்களைக் கொண்ட மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மலிவு விலையில் மருத்துவக் கல்வியை மேம்படுத்தவும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பிரதமரின் தொடர்ச்சியான முயற்சிக்கு இணங்க இந்த மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதாக அரசாங்கம் முன்பு கூறியது.
இதன் மூலம் இந்த மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 1.5 கோடி மக்கள் இதனால் பயன் அடைவார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் காணொளி மூலம் கலந்து கொண்டனர்.