75 லட்சம் மக்களுக்கு மேல் பங்கேற்ற சூர்ய நமஸ்கார நிகழ்ச்சி

0
398

நாடு சுதந்திரம் பெற்றதன் 75 ம் ஆண்டு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதை ஒட்டி மத்திய ஆயுஷ் அமைச்சகம் “ ஆற்றலுக்காக சூர்ய நமஸ்காரம்” எனும் மிகப்பெரிய நிகழ்ச்சியை கடந்த வெள்ளியன்று நடத்தியது. இதில் உலகெங்கிலும் இருந்து 75 லட்சம் மக்கள் பங்கு பெற்றனர். இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனோவால் “மக்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த சூரிய நமஸ்காரம் மூலம் சூரிய வழிபாடு செய்யப்படுகிறது. மக்களின் ஆரோக்கியத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா,மற்றும் சூரிய நமஸ்காரம் ஆகியவை ஊக்குவிக்கப்படுகின்றன.” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here