ராம சிம்ஹன் ஆன அக்பர் அலி:

0
231

கேரளவை சேர்ந்த திரைப்பட இயக்குனர் அக்பர் அலி. இவர் தன் மனைவியுடன் இஸ்லாத்தை துறந்து சனாதன தர்மத்தில் இணைந்தார். கேரளா வெள்ளினேழியில் உள்ள ஆர்ய சமாஜத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சுத்தி சம்ஸ்கார் சடங்கில் பங்கேற்று வேத மார்க்கத்தை ஏற்றார். இதில் அவருடன் அவரது மனைவியும் பங்கேற்றார். அக்பர் அலியின் பெயர் ராம சிம்ஹன் என்றும் அவரது மனைவிக்கு கௌரி என்ற பெயரும் சூட்டப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாநில ஆர்ய சமாஜப் பொறுப்பாளர் கள் பலர் இதில் பங்கேற்றனர்.
முன்னதாக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மரணத்தை கேலி செய்து இஸ்லாமியர்கள் சிலர் முகநூலில் பதிவிட்டதைத்தொடர்ந்து அக்பர் அலி இஸ்லாத்தை கைவிடப்போவதாக அறிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here