கொரோனவிற்கு எதிராக இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதை அடுத்து தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது
கொரோனா தடுப்பூசி கடந்த ஆண்டு ஜனவரி 16 ம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. அது ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இது வரை கிட்டத்தட்ட 157 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்ப்பட்டோரில் மொத்தம் 92 சதவீத மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அது போல 18 வயதுக்கு மேற்ப்பட்டோரில் மொத்தம் 68சதவீத மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை குறிக்கும் வகையில் மத்திய அரசு தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டவியா இந்த தபால் தலையை வெளியிட்டார்.