கம்பத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகியை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பம் பகுதி ஆர்எஸ்எஸ் பகுதி பொறுப்பாளர் ரவிக்குமார். இவரை கடந்த 7ம் தேதி அரிவாள் மற்றும் கம்பியால் தாக்கி கொலை செய்ய முயற்சி நடந்தது. இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கம்பம் உமர் பாட்சா தெருவைச்சேர்ந்த அப்துல் வாசித்(38) மற்றும் கம்பம் மெட்டு காலனியை சேர்ந்த சதம் ஹுசைன்(31) ஆகியோர் கைது செய்யப்பட்டு ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளனர்..