குடியரசு தின அணிவகுப்பு ஊர்தி – தமிழகம் புறக்கணிப்பா?-மத்திய அரசு விளக்கம்

0
397

குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து, பாரத பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். அதற்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், “பல்வேறுத் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் குழுவே, கலந்து கொள்ள இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கைப் பட்டியலை இறுதி செய்தது. மூன்று கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் 12 வாகன ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 2016, 2017, 2019 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில், குடியரசு தின அணிவகுப்பில், தமிழகம் கலந்து கொண்டு இருக்கின்றது. வழிகாட்டு நெறிமுறைகளின் படியே, அனைத்தும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது” என விளக்கம் அளித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here