பிபின் ராவத் ஐம்பொன் சிலை; குடந்தையில் வடிவமைப்பு

0
591

குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை, குடந்தையில் தயாராகி வருகிறது.
Shine Indian Soldiers Social Welfare Foundation.உடன் இணைந்து இதைத்தயரித்து வரும் முன்னாள் ராணுவ சங்கத்தைச்சேர்ந்த பாபு “ராவத் இந்த தேசத்திற்காக செய்த சேவையை நினைவு கூறும் வகையில் இந்த சிலையை தயாரித்து வருகிறோம். இது 120 கிலோ எடையுடைய மார்பளவு சிலை. இதற்கான செலவு மதிப்பீடு சுமார் 7 லட்சம்.” என்று கூறினார்.
“இந்த சிலை நாகேஸ்வரன் தெருவில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் தயாரானது. களிமண்ணால் தயாரிக்கும் ஆரம்ப கட்ட பணிகள் முடிந்து விட்டன. பஞ்சலோகத்தால் அதை மூடும் வேலைகள் மட்டும் மீதம் உள்ளன” என்று இன்னொரு முன்னாள் இராணுவ வீரர் பாலசுப்ரமணியன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here