கடத்தலில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் SDPI மாவட்ட தலைவரின் தம்பி கைது

0
506

கடத்தலில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் SDPI மாவட்ட தலைவரின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
யானை தந்தங்கள் , நட்சத்திர ஆமைகள், கடல் பசுக்கள் மற்றும் போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தி வரும் ஒரு மிகப் பெரிய நெட்வொர்க் குறித்த உளவுத் தகவல் தமிழக அரசுக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து தமிழக வனத்துறையின் விஜிலன்ஸ் பிரிவு மற்றும் தமிழக உளவுத்துறை ஆகியவை இணைந்து கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் ஒரு அதிரடி ஆபரேஷன் நடத்தி கடத்தல் கும்பலை கைது செய்தனர். இந்த கடத்தல் நெட் ஒர்க்கிற்கு தலைவனாக செயல்பட்டது ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவியாக இருக்கும் அக்பர் ஜான் பீவி யின் மகனும் ராமநாதபுரம் மாவட்டம் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ள ரியாஸ்கான் என்பவரின் தம்பியுமான அன்வர் அலி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here