பொறியாளர் தாக்கப்பட்ட விவகாரம்: திமுக எம் எல் ஏ மீது காவல் துறையிடம் புகார்

0
706

மாநகராட்சி இளநிலை பொறியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ., சங்கர் மீது போலீசில் சென்னை மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

நேற்று முன்தினம்(ஜன.,27) அதிகாலை சென்னை திருவொற்றியூர், 10வது வார்டு, நடராஜன் தோட்டம் பகுதியில், தார் சாலை போடும் பணி நடந்தது. அப்போது, எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்துள்ளனர்.தார் சாலை தரம் குறித்து, கேள்வி எழுப்பியபோது, மாநகராட்சி அதிகாரிகள் – எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள், இளநிலை பொறியாளர், ஊழியர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, எம்.எல்.ஏ., சங்கர் மீது புகாரளித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், இளநிலை பொறியாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here